இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசி 98 ரூபாவிற்கு விற்பனை

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யபட்ட நாட்டு அரிசி, ஒரு கிலோ 98 ரூபாவிற்கு சந்தைக்கு விநியோகிக்கப்படும் என இலங்கை சதொச தலைவர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாட்டரிசி அடங்கிய ஒன்பது கொள்கலன்கள், சுங்க திணைக்கள அனுமதியின் பின்னர் தமது நிறுவனத்திற்கு கிடைத்துள்ளதாக நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் நுகர்வோருக்கு நியாயமான விலையில் அரிசி விற்பனை செய்யும் நடவடிக்கை மேலும் விரிவடையும் என குறிப்பிட்டார்.

மேலும், கொழும்பு துறைமுகத்தில் இருந்த 81 சீனி கொள்கலன்கள், இலங்கை சதொச நிறுவனத்திற்கு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையின் கீழ், சதொச கிளைகளில் பொதுமக்களுக்கு சீனி இருப்புக்கள் விநியோகிக்கப்படும் எனவும் மேலும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply