வகுப்பில் குழப்படி செய்வோருக்கே பொறுப்பு! சந்திரசேன எம்பி

வகுப்பில் குழப்படி செய்வோரிடமும் கெட்டிக்காரர்களிடமுமே அந்த வகுப்பின் பொறுப்பை ஒப்படைப்பது போன்று, ஞானசாரரை தலைவராக ஜனாதிபதி நியமித்திருக்கிறார் என காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

கிண்ணியா பிரதேசத்தில், 89 பேருக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

வீட்டுக்கு வீடு உறுதி வழங்கும் தேசிய திட்டத்தின் கீழ், திருகோணமலையில் முதலாவதாக கிண்ணியா பிரதேசத்தில் வழங்கப்படுவதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன்.

ஜனாதிபதி பௌத்த மதத்துக்கு உரியவர் என்றும், அதனால் ஏனைய மதங்களுக்கு அச்சுறுத்தலாகவும் இடையூறாகவும் இருப்பார் என்ற சிறுபான்மையினரின் தப்பான சிந்தனை தற்போது விலகி வர ஆரம்பித்துள்ளது.

இந்நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஒரே நாட்டவர் என்ற அடிப்படையில், தனது தூரநோக்கு சிந்தனையை ஜனாதிபதி ஆரம்பித்திருக்கிறார்.

அரச காணிகளில் குடியிருக்கும் அனைவருக்கும் காணி உறுதிப்பத்திரம் வழங்கப்பட வேண்டுமென பணிப்புரை விடுத்திருந்த நிலையில், அதற்காக சகல நடவடிக்கையையும் முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.

இத்திட்டத்தின் கீழ், ஒரு இலட்சம் காணி உறுதிகள் வழங்கப்பட வேண்டும்.

எனினும், கொனோரா தாக்கம் காரணமாக அவற்றை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாது போனாலும், ஆகக்குறைந்தது 60 உறுதிப்பத்திரம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்- என்றார்.

இதேவேளை, வகுப்பில் குழப்படி செய்வோரிடமும் கெட்டிக்காரர்களிடமுமே அந்த வகுப்பின் பொறுப்பை ஒப்படைப்பது போன்று, ஞானசாரரை தலைவராக ஜனாதிபதி நியமித்திருக்கிறார் என அவர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிட்டதக்கது.

Leave a Reply