இரு தரப்பினருக்கும் இடையிலான ஒப்பந்தத்தை மீறி கடன் சான்று பத்திரத்திற்கான கொடுப்பனவை செலுத்தாமையால் மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் இணைப்பதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.
கடன் கடிதம் மற்றும் இரு தரப்பிற்கு இடையிலான உடன்படிக்கைகளின் பிரகாரம், பணம் செலுத்த தவறியதை அடுத்து, இலங்கையிலுள்ள சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வணிக அலுவலகத்தினால் கறுப்பு பட்டியலில் மக்கள் வங்கி, இணைக்கப்பட்டுள்ளது.
சீனாவின் இந்த தீர்மானம், வர்த்தக அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.






