இராணுவ வாகனத்துடன் விபத்துக்குள்ளான இளைஞன் உயிரிழப்பு!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு நகரில் நிறுத்தப்பட்டிருந்த இராணுவத்தினரின் வாகனத்துடன் மோதி படுகாயமடைந்த இளைஞன் ஒருவன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட நிலையில் உயிரிழந்தார்.

இச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றிருக்கின்றது.

புதுக்குடியிருப்பு, வேணாவில் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய மாரிமுத்து பவிசாந்த் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார்.

நேற்றிரவு மின்சாரம் தடைப்பட்டிருந்ததுடன், மழையும் பெய்து கொண்டிருந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் நிறுத்தப்பட்டிருந்த இராணுவ வாகனத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதுதொடர்பில், புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply