கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்தில் மரநடுகை நிகழ்வு!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்தில் மரம் நடுவோம் சுற்றுச் சூழல் காப்போம் எனும் தொனிப்பொருளில் மரநடுகை நிகழ்வு இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்றுள்ளது

கண்டாவளை பிரதேசத்தின் ஓசோன் செயற் திட்டத்தின்கீழ் கண்டாவளை சிவில் சமூக ஒன்றியத்தினூடாக மரக்கண்றுகள் நடுகை மற்றும் மரக்கன்று வழங்கும்  நிகழ்வு. பிரதேச செயலகத்தில் நடைபெற்றுள்ளது

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற குறித்த வேலைத்திட்டத்திற்கு அமைவாக கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்தில் குறித்த நிகழ்வனது கண்டாவளை பிரதேச செயலாளர் ரீ. பிருந்தாகரன்  தலைமையில்  நடைபெற்றது

நிகழ்வில் மாவட்ட அரசாங்க மேலதிக அரச அதிபர் (காணி) திருலிங்கநாதன்  தரும்புரம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி   இராணுவ அதிகாரி  பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a Reply