அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, நேற்றுடன் (28) நிறைவடையவிருந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் ஏப்ரல் 28 ஆம் திகதி வரையான 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்படுவது இது மூன்றாவது தடவையாகும்.
சீனா அதிரடி: மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலுக்குள் சேர்த்தது!






