சீமெந்து தட்டுப்பாட்டிற்கு மூன்று வாரங்களில் தீர்வு!

சீமெந்து தட்டுப்பாட்டிற்க்கு எதிர்வரும் 03 வாரங்களில் தீர்வு கிடைக்கும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

மூன்று வாரங்களின் பின்னர் சந்தைக்கு தேவையான சீமெந்தை விநியோகிப்பதற்கு இறக்குமதியாளர்கள் உறுதியளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சீமெந்து மற்றும் சீனி இறக்குமதியாளர்களுடன் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், கடந்த தினங்களில் 230 ,- 240 ரூபா வரையில் சீனியின் விலை உயர்வடைந்தது. எவ்வாறிருப்பினும் நுகர்வோர் அதிகாரசபை என்ற ரீதியில் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்துள்ளோம்.

எனவே, கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சதொச என்பவற்றில் சிவப்பு மற்றும் வெள்ளை சீனி என்பவற்றை கட்டுப்பாட்டு விலையில் விநியோகிப்பதற்கு உகந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.

Leave a Reply