கெரவலபிட்டிய மின்நிலையத்தை விற்பனை செய்தமைக்கு எதிராக யாழில் போராட்டம்!

கெரிவலபிட்டிய மின் நிலையத்தை அமெரிக்காவுக்கு விற்பனை செய்தமைக்கு எதிராக இலங்கை மின்சார சபை தலைமையகத்துக்கு முன்றலில் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கெரிவலப்பட்டிய மின்நிலையத்தின் 40 வீத பங்கை அமெரிக்காவுக்கு விற்பனை செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டணியினரின் ஏற்பாட்டில், அனைத்து இலங்கை மின்சார சபையின் தலைமை காரியாலயங்களுக்கு முன்றிலில் இன்று கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில், யாழ்ப்பாணம் பழைய பூங்கா வீதியில் உள்ள இலங்கை மின்சார சபையின் தலைமை காரியாலய முன்றிலில், கையெழுத்து போராட்டம் இடம்பெற்றதோடு, கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

Leave a Reply