முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு காட்டுப்பகுதியிலிருந்து ஒரு தொகை வெடிபொருட்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது, இனங்காணப்படாத 21 குண்டுகள் மற்றும் 60 மில்லிமீற்றர் ரக மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த வெடிபொருட்கள் போர்க்காலத்தில் விடுதலைப்புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






