சுகாதார நடைமுறைகளை மீறிய 250 பேருக்கு எதிராக நடவடிக்கை!

சுகாதார நடைமுறைகளை பின்பற்றத் தவறிய 250 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவில் கடந்த மாதம் முதல் நேற்றுமுன்தினம் வரையான காலப்பகுதியில் முககவசம் மற்றும் சமூக இடைவெளிகள் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை மீறி செயற்பட்டவர்களுக்கு
எதிராகவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .

தொடர்ந்தும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், தேவை இன்றி நகரில் நடமாடுவதை தவிர்க்குமாறும், சுகாதார வழிகாட்டல் நடைமுறைகளை பொதுமக்கள் பின்பற்றி நடக்குமாறும் பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply