வடக்கு மாகாணத்தில் 14,617 கர்ப்பிணி பெண்களுக்கு ரத்தி, அங்கர் பால்மா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும், கூட்டுறவு பதிவாளருமான மு.நந்தகோபன் தெரிவித்தார்.
14,617 கர்ப்பிணிப் பெண்களுக்கு 400 கிராம் அங்கர், ரத்தி பால்மா பைக்கெட்டுகளை ரூபா 280இற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யாழில் 7,272 கர்ப்பிணிகளும், கிளிநொச்சியில் 2,100 கர்ப்பிணிகளும், முல்லைத்தீவில் 1,300 கர்ப்பிணிகளும், வவுனியாவில் 2,230 கர்ப்பிணிகளும், மன்னாரில் 1,715 கர்ப்பிணிகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு தலா இரண்டு பால்மா பைகள் வழங்கப்படுவதோடு, அவர்களுக்கு உரிய முறையில் பகிர்ந்தளிக்க, மாவட்ட உதவியாளர்களின் நெறிப்படுத்தலில் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் மேற்பார்வையில் இடம்பெற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.






