ஈஸ்டர் தாக்குதல்: நீதிக்கான போராட்டத்திற்கு ஆதரவு! ஆனந்த சாகர தேரர்

ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கிடைக்காவிட்டால், கர்தினால் மேற்கொள்ளும் நீதிக்கான போராட்டத்திற்கு தாம் பூரண ஆதரவளிப்போம் என ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில், கடந்த ஆட்சியில் காணப்பட்ட அரசியல்வாதிகளும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதைய ஆட்சியிலுள்ள அரசியல்வாதிகள் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் கூட இதன் பின்னணியில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இதற்கு நியாயமான விசாரணைகள் நடைபெறாவிடின் சர்வதேச அரங்கிற்குச் செல்லவோ, நீதி கேட்கவோ கர்தினால் மேற்கொள்ளும் அனைத்து போராட்டத்திற்கு தாம் பூரண ஆதரவளிப்பதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply