விவசாயிகளைத் தூண்டி, வீதியில் போராட்டத்திற்கு இறக்கிவிட்டு, அதன்மூலமே ஐக்கிய மக்கள் சக்தியினர் அரசியல் பிழைப்பு நடத்தி வருகின்றது என இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ குற்றஞ்சாட்டியுள்ளார்
மேலும் அவர் கூறுகையில்,
எமது மக்களைக் காக்க நாமும் இயற்கை விவசாயத்தை நோக்கி நகர்கின்றோம். அதற்காகவே உர இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டது.
இரசாயன உரப் பயன்பாட்டை கைவிட்டு, சேதன பசளை மூலமான விவசாயத்தை நோக்கி உலக நாடுகள் பயணிக்கின்றன.
இரசாயன உரம் என்பது நஞ்சு. விவசாயிகளுக்குத் தேவையான சிறந்த உரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
நிலைமை இவ்வாறிருக்கையில் விவசாயிகளைத் தூண்டிவிட்டு ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிரணிகள், விவசாயிகளின் போராட்டங்கள் ஊடாகவும் அரசியல் செய்கின்றது.
ஆனால், எதற்காக தற்போது இரசாயன உரத்துக்கு குரல் கொடுக்கின்றனர் எனத் தெரியவில்லை என மேலும் தெரிவித்தார்.






