இலவச கல்வியை பணத்துக்காக விற்காதே! வேலணையில் போராட்டம்

வேலணையில் ஆசிரியர் சங்கத்தினர், கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டம், இன்று வெள்ளிக்கிழமை 3 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதிபர் – ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்குமாறு கோரி, தீவகக்கல்வி வலயத்தின் வேலணை கோட்டக் கல்விப்பணியகம் முன்பாக அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியர்களின் சம்பளம் முரண்பாட்டிற்கு தீர்வினை வழங்கு, இருபத்தி நான்கு வருடங்கள் கொள்ளையடித்த ஆசிரியர்களின் பணத்தை வழங்கு, இராணுவ மயமாக்கல் முன்பள்ளி கல்வி முறையை நீக்கு, சுபோதினி கமிஷன் அறிக்கையை அமுல்ப்படுத்து இடைக்கால சம்பள முறையை ஒரே தடவையில் வழங்கும் இலவச கல்வியை பணத்துக்காக விற்காதே, இலவசக்கல்வி இடர்களை நீக்கு,போன்ற கோஷங்களை எழுப்பி போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன், ஏற்பாட்டில் நடைபெற்ற போராட்டத்தில் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a Reply