ராஜபக்சக்கள் ஆட்சிக்கு வருவதற்கு கைகொடுத்த சீனா, இப்போது அவர்களின் கன்னத்தில் அறைய ஆரம்பித்துள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்கள் வங்கி, சீனத் தூதரகத்தால் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளமை தொடர்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், இந்த அரசைக் கொண்டு வருவதற்காக சீனாவின் ஒத்துழைப்பை வழங்கியதுடன், அதற்கு பிரதி உபகாரமாக இலங்கையில் தமக்குத் தேவையான இடங்களைப் பெற்றுக்கொள்ள அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது சீனத் தூதரகம் மக்கள் வங்கியைக் கறுப்புப் பட்டியலில் சேர்த்தமை, சீன அரசு அல்லது சர்வதேசம், ராஜபக்ச அரசாங்கத்தை கறுப்புப் பட்டியல் சேர்ப்பதற்கு சமமானது என அவர் தெரிவித்துள்ளார்.






