திருமலையில் 19 வயது பிரிவினருக்கு பைசர் தடுப்பூசி

திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நாளை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதனை, திருகோணமலை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி கே. விஜயகுமார் தெரிவித்தார்.

அதன்படி, 19 வயது பிரிவினருக்கான பைசர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை, திருகோணமலை பிரதேச சுகாதார பணிமனையில் நாளை சனிக்கிழமை காலை 9 மணி தொடக்கம் 1 மணி வரையில் நடைபெறவுள்ளது.

இதேவேளை, குறித்த நடவடிக்கை நாளை 30.10.2021 தொடக்கம் நாளை மறுதினம் 31.10.2021, ஆகிய இருநாட்களும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply