அன்று ரொனால்டோ.. இன்று வார்னர்… திடீரென கோகோ கோலா பாட்டில்கள் அகற்றம்.. இறுதியில் கொடுத்த ட்விஸ்ட்

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் நேற்று முன்தினம் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதின.

இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 154 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் டேவிட் வார்னர். கடந்த சில போட்டிகளில் ஃபார்ம் அவுட்டில் இருந்த அவர் நேற்று அரைசதம் விளாசினார்.

42 பந்துகளை சந்தித்த வார்னர் 10 பவுண்டரிகளுடன் 65 ரன்களை சேர்த்தார். இதனால் 17 ஓவர்களிலேயே ஆஸ்திரேலிய அணி இலக்கை எட்டியது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்த பிறகு வார்னர் செய்த சேட்டை ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆட்டத்திற்கு பிறகு அவர் பத்திரிகையாளர்களை அவர் சந்தித்தார்.

அப்போது அவர் திடீரென தன் முன் மேஜையில் இருந்த கோக்கோ கோலா பாட்டில்களை அகற்றினார். இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த கடந்த ஜூன் மாதம் நடந்த யூரோ-2020 கால்பந்துப் போட்டியில் போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டா பத்திரிகையாளர் சந்திப்பின்போது கோலா பாட்டில்களை அகற்றியது பூதாகரமாக வெடித்தது.

குளிர்பானங்களுக்கு மாற்றாக தண்ணீரை குடியுங்கள் என வலியுறுத்தி அவர் அப்படி செய்தார். அவரின் செயலால் கோகோ கோலா நிறுவனத்திற்கு சுமார் 500 கோடி டாலர்கள் இழப்பு ஏற்பட்டது.

இதனியே தான் டேவிட் வார்னரும் நேற்று செய்தார். அப்போது அவர் சிரித்தபடியே, நான் இதனை எடுக்கலாமா, அல்லது அங்கேயே வைத்துவிடவா? என்று கேட்டார்.

மேலும் இது ரொனால்டோவுக்கு சரி என்று தோன்றி இருந்தால், எனக்கும் இது சரி தான் எனக்கூறினார். ஆனால், சிறிது நேரத்தில் மீண்டும் அதை தானே வைத்துவிட்டார். இதனால் ஏதேனும் கோலா நிறுவனத்திற்கு இழப்பீடு ஏற்பட்டதா என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.

Leave a Reply