யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் நெறிப்படுத்தலில் யாழ்ப்பாண பொலிசாரால் பண்ணை கடற்கரைப்பகுதியில் சிரமதானப்பணி இன்று காலை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரான்சிஸ் தலைமையிலான யாழ்ப்பாண பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் தொண்டு நிறுவன பிரதி நிதிகளின் பங்களிப்புடன் இச் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.
பண்ணை கடற்கரை பகுதி மற்றும் யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதான வீதியின் இருமருங்கிலும் சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன், வீதிகளில் காணப்பட்ட பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் சேகரிக்கப்பட்டு யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதாரப் பிரிவினரின் உதவியுடன் அகற்றப்பட்டுள்ளன.







