காணாமல்போனோர் விவகாரத்திற்கு விரைவில் தீர்வு!

காணாமற்போனோர் விவகாரதத்திற்கு தீர்வை காணும் வகையில் கலந்துரையாடலை நடத்திய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, உறவுகளுடனான சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யுமாறு கோரியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கும் கடற்றொழில் அமைச்சருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற விசேட சந்திப்பின் போது ஜனாதிபதியால் மேற்குறிப்பிட்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனோரின் விவகாரத்திற்கு தீர்வு காணப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுவந்த நிலையில், உறவுகளை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதனடிப்படையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், கொரோனாத் தொற்று பரவல் ஏற்படுத்திய அசாதாரண நிலைமையால் குறித்த சந்திப்பிற்கான திகதி தீர்மானிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில்,காணாமல் போனோரின் உறவினர்களின் விவகாரத்தை தீர்த்து வைக்கும் வகையிலான கலந்துரையாடல்களுக்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு நேற்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உறவுகள் காணாமல் போனதால் ஏற்பட்டுள்ள வாழ்வாதாரப் பிரச்சினைகளை கவனத்தில் எடுத்து அவற்றை தீர்ப்பதற்கும், தேவையான தீர்வை வழங்குவதற்கும் தயாராக இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஸ உறுதியளித்ததாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார்.

Leave a Reply