பதுளை எல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹல்பே தோட்டம் பகுதியில், வீதியின் மீது மண்சரிந்து விழுந்தில், வீதியில் பயணித்த ஒருவர் உயிரிழந்தார்.
திவுல்கஸ்தென்ன, ஹேலஹல்பே பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்தார்.
வீதியிலிருந்து சுமார் 300 மீற்றர் தொலைவிலுள்ள நீர்நிலையிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பிரேதப் பரிசோதனைக்காக பதுளை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.






