கிளிநொச்சி ஏ9 வீதியில் விபத்து: ஒருவர் படுகாயம்!

கிளிநொச்சி, கந்தசுவாமி ஆலயத்தை அண்மித்து, ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த விபத்து இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வீதியை கடக்க முற்பட்ட ஒருவர் மீது ரிப்பர் ஒன்று மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த நபர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

இதுதொடர்பில், கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply