யாழில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கொட்டும் மழையிலும் போராட்டம்!

யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள ஐ.நா.உயர்ஸ்தானிகர் கள அலுவலகம் முன்றலில் கொட்டும் மழையிலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

வடகிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், தமது பிள்ளைகளை உலக நாடுகள் மீட்டுத்தர வேண்டும், இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும், இந்த அரசாங்கத்தில் நம்பிக்கையில்லை, சர்வதேசமே நமக்கு தீர்வை கொடு போன்ற கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டத்தின்போது, புலனாய்வாளர்கள் அவ்விடத்தில் குவிந்திருந்தமையை அவதானிக்க முடிந்தது.

Leave a Reply