வடகொரிய ஜனாதிபதியை போல் செயற்படுகிறார் கோட்டாபய!

வடகொரிய ஜனாதிபதியை போன்றே தற்போது எமது நாட்டு ஜனாதிபதியும் செயற்படுகின்றார் என கொழும்பில் பேராயர் மல்கம் ரஞ்சித் தலைமையில் இடம்பெற்ற சந்திப்பின்போது கிறிஸ்தவ நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்ரர் குண்டுத் தாக்குதலிற்கு தற்போதைய ஆட்சியாளர்களின் பின்னணி இருக்கும் என அப்போதே கூறப்பட்டாளும், அதனை நம்பாது பலர் தற்போதைய ஆட்சியாளர்களின் பின்னால் நின்றனர். இருந்தபோதும் தற்போது மெல்ல மெல்ல உண்மையை தெரிகின்றது.

இதேநேரம், தெற்கு நிலமைகளோடு வடக்கு, கிழக்கு நிலமைகள் தொடர்பிலும் கருசணை கொள்ள வேண்டும்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு முன்வைத்த சிபார்சுகளை உடன் நடைமுறைப்படுத்த கோருவது எனத் தீர்மானிக்கப்பட்டதோடு, இவற்றை ஜனாதிபதிக்கு எழுத்தில் கடிதமாக அனுப்ப ஆராய்ந்த சமயம், ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்புவதில் பயன் கிடையாது.

ஏனெனில், தற்போது எமது நாட்டு ஜனாதிபதியும் வடகொரிய ஜனாதிபதிபோன்றே செயற்படுகின்றார் என கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

[embedded content]

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Leave a Reply