பேராயர் கூட்டிய கூட்டத்தில் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்!

பேராயர் மல்கம் ரஞ்சித் கூட்டிய கத்தோலிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடலில் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் நாட்டின் அனைத்து ஆயர்களும் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றது.

நாட்டில் உள்ள சகல கத்தோலிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களும் பேராயர் இல்லம் மூலம் எழுத்திலும், தகவல் மூலமும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு பேராயர் தலைமையில் கொழும்பில் இடம்பெற்ற கூட்டத்தில் நாட்டின் 13 ஆயர்களும் கலந்துகொண்டபோதும் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். கலந்துகொண்ட 5 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஆளும் கட்சியின் இராஜாங்க அமைச்சர் ஒருவரும் எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த நால்வரும் கலந்துகொண்டனர்.

கலந்துகொண்ட நான்கு எதிர்க் கட்சி உறுப்பினர்களில் இருவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

[embedded content]

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Leave a Reply