இந்திய மீனவர்கள் 23 பேரும் யாழ் சிறைக்கு மாற்றம்!

இந்திய மீனவர்கள் 23 பேரும் இன்று காலை யாழ்ப்பாணச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

காரைநகர் கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 23 தமிழக மீனவர்களை, யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

கடந்த 11ஆம் திகதி இரண்டு படகுகளில், இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்து காங்கேசன்துறை கடற்படை முகாமில் தங்க வைத்திருந்தனர்.

இந்நிலையில், கடற்படை முகாமில் உள்ள தமிழக மீனவர்கள் 23 பேரையும், யாழ்ப்பாணம் சிறைக்கு மாற்றக் கோரி, யாழ்ப்பாண மாவட்ட நீரியல்வளத்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இது தொடர்பான மனுவை விசாரித்த நீதிவான், கைது செய்யப்பட்ட அனைவரையும் யாழ்ப்பாணம் சிறையில் வைக்க உத்தரவிட்ட நிலையில், இன்று அவர்கள் யாழ்ப்பாண சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Leave a Reply