கிளிநொச்சியில் மட்டுப்படுத்தப்பட்ட குடி நீர் விநியோகமே மேற்கொள்ளப்படும் என கிளிநொச்சி மாவட்ட நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கிளிநொச்சி, முல்லைத்தீவு, பொறியியலாளர் எந்திரி எஸ். சாரங்கன் தெரிவித்துள்ளார்.
தற்போது பெய்து வரும் அதிக மழை காரணமாக, கிளிநொச்சி குளத்திற்கு அதன் நீரோந்து பகுதிகளிலிருந்து அதிகளவான கலங்கிய நீர் வருவதனால், குடிநீருக்கான நீரை சுத்திகரித்து வழங்குவதில் நெருக்கடி நிலை காணப்பட்டுள்ளது.
இதனால், பொது மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்துவதோடு, குடிநீருக்கு கொதித்தாறிய நீரை பயன்படுத்துமாறும் அவர் தெரிவித்துள்ளார்.






