பொரளை பகுதியில் கடமையில் இருந்த மூன்று போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தி தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று பதிவாகி இருந்தது.
இது தொடர்பில், 18 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, காயமடைந்த மூன்று பொலிஸ் அதிகாரிகளும் வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், இதுதொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய 18 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






