கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்துக! விவசாயிகள் கோரிக்கை

கண்டாவளை, முரசுமோட்டை, பெரியகுளம், கல்மடு போன்ற பகுதிகளில், பெரும்போக பயிற்செய்கை ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையில் கட்டாக்காலி கால்நடைகள் நடமாடுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், பயிற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள பகுதிகளில் தினமும் பயிர்களை நாசம் செய்து வருகின்றன.

உரப்பிரச்சனை மற்றும் கிருமிநாசினி பிரச்சினைகளுடன் தற்போது, கட்டாக்காலி கால்நடைகள் பிரச்சினையும் சவாலாக உள்ளது.

பயிர்செய்கை கூட்டங்களில் கால்நடை கட்டுப்பாடுகள் தொடர்பாக எடுக்கப்படும் தீர்மானங்கள் வெறும் பேச்சளவிலேயே உள்ளது. இது நடைமுறைகளுக்கு வருவதில்லை.

இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய கமக்கார அமைப்புக்கள் ஊடாக கால்நடைகளை கட்டுப்படுத்துமாறு விவசாயிகள் கோரிக்கை விடுக்கப்படுகின்றது.

Leave a Reply