யானை வேலிகளை பாதுகாப்பதற்காக 5,000 இளைஞர்கள் பணிக்கு!

யானைகளால் மனிதர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் அதிகமாக காணப்படும் 14 மாவட்டங்களில், யானை வேலிகளை பாதுகாப்பதற்காக, 5,000 இளைஞர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக வனவளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பல்நோக்கு அபிவிருத்திப் பணிக்குழு திணைக்களத்தின் கீழ் இந்த இளைஞர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

யானை வேலியை பாதுகாப்பதும் அதனை பராமரிப்பதும் இந்தக் குழுவின் பொறுப்பாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply