இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கிய குற்றச்சாட்டில் 10 பெண்கள் உட்பட 18 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த தாக்குதல்,மொரட்டுவை – மாதங்கஹவத்தை பிரதேசத்தில் இடம்பெறுள்ளதாக மொரட்டுவை பொலிஸார் தெரிவித்தனர்.
நடமாடும் பொலிஸ் வாகனத்தில் இருந்த இரண்டு உத்தியோகத்தர்களும் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பாக விசாரணை செய்வதற்காக மாதங்கஹவத்தைக்கு சென்ற போதே இத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதன்படி, காயமடைந்த பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக மேலும் தெரிவித்துள்ளனர்.






