திருகோணமலை வெள்ளம்: மூழ்கும் நிலையில் தாழ்நிலப் பகுதிகள்

திருகோணமலை மாவட்டத்தில் பெய்து வருகின்ற அடை மழை காரணமாக, தாழ்நிலப் பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கி வருகின்றன.

தற்போதைய காலநிலை காரணமாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது.

இந்த நிலையில், திருகோணமலை – கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பேராறு, வான்எல, ஜயந்திபுர மற்றும் பேராற்றுவெளி, தம்பலாகாமம், முள்ளிப்பொத்தானை போன்ற பகுதிகளிலும் தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

அத்துடன், வடிகான்களிலும் வெள்ள நீர் வடிந்து ஓடுவதோடு சில குடிசை வீடுகளுக்குள்ளும் நீர் புகுந்து மக்கள் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளனர்..

மேலும், பல வீதிகளில் மழைநீர் தேங்கிக் காணப்படுவதோடு சில வீதிகளில் போக்குவரத்து மேற்கொள்ள முடியாமல் உள்ளது.

Leave a Reply