மன்னாருக்கு விஜயம் செய்த ரிஷாட்: கண்ணீர் மல்க வரவேற்ற மக்கள்

மன்னார் மாவட்டத்திற்கு இன்று விஜயமொன்றை மேற்கொண்ட, மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனை, மக்கள் கண்ணீர் மல்க வரவேற்றுள்ளனர்.

கடந்த 6 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த ரிஷாட் பதியுதீன் அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், தனது ஆதரவாளர்களை இன்று சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் மன்னாரிற்கு சென்று சந்தித்துள்ளார்.

மன்னார் தாராபுரம் பகுதியில் உள்ள மக்கள், ரிஷாட் பதியுதீனை கண்ணீர் மல்க வரவேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, வருகை தந்த பல நூற்றுக்கணக்கான தமிழ், முஸ்லிம் மக்களை சந்தித்து ரிஷாட் கலந்துரையாடினார்.

வயோதிபர்கள், தாய்மார்கள் அவரை வரவேற்று சுகம் விசாரித்ததோடு, அவரின் நல்வாழ்வுக்காக தொடர்ந்து பிரார்த்திப்பதாகவும் ரிஷாட் நம்பிக்கை வெளியிட்டார்.

இதேவேளை, தான் சிறையில் இருந்தபோது, தனக்காகப் பிரார்த்தித்த அனைவருக்கும் ரிஷாட் பதியுதீன் தனது நன்றிகளை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply