வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதியிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்த 13 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம், இன்று சனிக்கிழமை மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 5வாள்கள், 2 மோட்டார் சைக்கிள் செயின், 6 சரை கஞ்சா மற்றும் ஒரு கிராம் 650 மில்லிக் கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
வன்முறைக் கும்பல் ஒன்று, பழைய வீடொன்றில் இருந்து வன்முறைக்கு தயாராகி வருவதாக பொலிஸாருக்குக் தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து வீட்டை சுற்றிவளைத்து சோதனையிட்டுள்ளனர்.
இந்தநிலையில், சந்தேக நபர்கள் 13 பேரும் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்






