கல்கிஸை பகுதியில், சட்டவிரோத பாலியல் கடத்தல் கும்பலினால் பாதிக்கப்பட்ட ஐந்து இந்தோனேசியப் பெண்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் இன்று சனிக்கிழமை இடம்பெறுள்ளது.
மேலும் தெரியவருகையில்,
சர்வதேச நட்சத்திர ஹோட்டல்களில் வேலை வாங்கித் தருவதாக பாலியல் கடத்தல் கும்பலால் உறுதியளித்து, ஐந்து இந்தோனேசியப் பெண்களும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
எனினும், பெண்கள் நாட்டுக்கு வந்தவுடன், அவர்களின் கடவுச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தெஹிவளை – கல்கிஸையில் அமைந்துள்ள விபச்சார விடுதிகளில் பாலியல் தொழிலில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்
குறித்த பெண்களை, கல்கிசை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்போது, அவர்களை பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
குறித்த பெண்கள், பாலியல் கடத்தலுக்கு ஆளானவர்கள் என்ற போதிலும், விபச்சார கட்டளைச் சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்டவர்கள் மீது பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மேலும், பாலியல் வன்கொடுமை தொடர்பாக விசாரணை நடத்துமாறும், பாதிக்கப்பட்டவர்களின் கடவுச்சீட்டை நீதிமன்றக் காவலில் எடுத்து அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.






