இன்றுடன் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டு தளர்வு

கொரோனா பரவல் காரணமாகஇ மாகாணங்களுக்கு இடையில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாட்டு இன்று தளர்த்தப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 4 மணியுடன் இந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது.

அதன்படிஇ மாகாணங்களுக்கு இடையில் தடையின்றி மக்களுக்கு பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேவேளைஇ பேருந்துகளின் ஆசன எண்ணிக்கைக்கு அமைவாகவேஇ பயணிகள் அழைத்து செல்லப்படவுள்ளனர்.
அத்துடன்இ ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாளை திங்கட்கிழமை சுமார் 152 ரயில்களை இயக்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதேவேளைஇ சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டிகளை உரிய வகையில் பின்பற்றுமாறு சுகாதார பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply