மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலிடப்பட்டது பற்றி தமக்கு தெரியாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கண்டி மல்வத்து அஸ்கிரி பீடாதிபதிகளை பசில் ராஜபக்ச சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போதே, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
மக்கள் வங்கி கறுப்புப் பட்டியலிடப்பட்டுள்ளது என்பது பற்றி தமக்கு அறிவிக்கப்படவில்லை.
யுகதனவி மின் நிலையம் தொடர்பில் ஆளும் கூட்டணி கட்சிகளுடன் நடாத்திய சந்திப்பு பற்றி இன்னும் யோசிக்கவில்லை.
மக்களுக்கு நல்லதொரு வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க அதிர்ஸ்டம் கிட்டும் என குறிப்பிட்டார்.
சமர்ப்பிக்கப்பட உள்ள வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஆசீர்வாதம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் தலதா மாளிகைக்கு சென்றதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்.






