அநுராதபுரத்தில், கடந்த வாரம் கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.
இதனை, அநுராதபுரம் மாவட்ட தொற்று நோய் தொடர்பான விசேட வைத்திய நிபணர் வைத்தியா் ஆர்.எம். ரத்நாயக்க தெரிவித்துள்ளாா்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அநுராதபுரம் மாவட்டத்தில் கடந்த வாரம் அதிகளவான கொரோனா நோயாளா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை வெள்ளிக்கிழமை வரையான 5 நாட்களில் மாத்திரம் 650 நோயாளர்களுக்கும் அதிகளவானவா்கள் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அநுராதபுரம் மாவட்டத்தில் ஆரம்பப் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிலருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது – என்றார்.






