யாழ்ப்பாணம் – கொழும்பு ரயில் சேவை எதிர்வரும் மூன்றாம் திகதி மாலை ஆரம்பமாகவுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய பிரதான புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார்
அதன்படி, கல்கிசை, காங்கேசன்துறைக்கு இடையிலான ரயில் சேவை எதிர்வரும் 3 ஆம் திகதி மாலை ஆரம்பமாகவுள்ளது.
மூன்றாம் திகதி மாலை 5.30 மணிக்கு கல்கிசையில் இருந்து புறப்படும் ரயில் காங்கேசன்துறையை வந்தடைந்து, மறுநாள் 4 ஆம் திகதி காலை 5.30 மணியளவில் காங்கேசன் துறையிலிருந்து புறப்பட்டு கொழும்புக்கு பயணிக்கவுள்ளது.
எனினும், முற்பதிவு தொடர்பான எந்தவித தகவல்களும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
மேலும், யாழிலிருந்து கொழும்பிற்கு ஒரு சேவையும், கொழும்பில் இருந்து யாழிற்கு ஒரு சேவையுமாக சாதாரண ரயில் சேவை மாத்திரமே முதலில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.






