விக்கி மீண்டும் முதல்வராக ஆதரவு இல்லை! சிவாஜிலிங்கம்

வடக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக மீண்டும் களமிறங்கினால் ஆதரவளிக்கப்போவதில்லை என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம். கே.சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த இரவு ஒளிபரப்பான நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டபோது, முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குமாறு கூட்டுக்கட்சிகள் கோரிக்கைவிடுத்தால் போட்டியிடத் தயார் என விக்னேஸ்வரன் தெரிவித்தமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், தாம் ஆதரவு வழங்கப்போவதில்லை என்றும் சி.வி.விக்னேஸ்வரனுக்கு மக்கள் தற்போது அளித்துள்ள பொறுப்புக்களை அவர் சரிவர ஆற்ற வேண்டும் என்பது தமது விருப்பம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply