களுத்துறை – ரேமுன பிரதேசத்திலுள்ள வீடொன்றில், தம்பதியினர் மீது நேற்று (30), மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவத்தில், அவரது கணவர் படுகாயமடைந்த நிலையில் ஹொரன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த தாக்குதலில் 58 வயதுடைய பெண்ணே மரணமடைந்துள்ளார்.
பொல் மற்றும் கூரிய ஆயுதங்களினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதோடு, குடும்பத் தகராறே இந்தப் படுகொலைக்குக் காரணம் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனினும் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் தப்பி சென்றுள்ளார்.
அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






