வவுனியாவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட நபர்!

வவுனியா மூன்று முறிப்பு பகுதியில் கேரள கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் கஞ்சா விற்பனை இடம்பெறுவதாக விசேட அதிரடிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து, குறித்த பகுதியில் நேற்றையதினம் (30) தேடுதல் நடாத்திய பொலிஸார், வீடொன்றில் இருந்து 3 கிலோ 700 கிராம் கேரள கஞ்சாவினை மீட்டுள்ளனர்.

அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில், அதே பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளிற்காக வவுனியா பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தம்பதியினர் மீது கொடூர தாக்குதல்: பெண்ணொருவர் படுகொலை

Leave a Reply