ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கெலனிகம பகுதியில், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அம்பியுலன்ஸ் வாகனம் ஒன்று உட்பட 5 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.

சம்பவத்தில் 5 பேர் காயங்களுக்குள்ளான நிலையில், ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு காயமடைந்தவர்களுள் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் காஸ்ட்பிள் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply