வாழைச்சேனையில் கோடரித் தாக்குதல்! சந்தேக நபர் தலைமறைவு

ஓட்டமாவடி பகுதியில், தனது மாமா, மாமியை நபரொருவர் கோடரியால் வெட்டி தாக்கியுள்ளார்.

இச் சம்பவம் நேற்று சனிக்கிழமை (30) இடம்பெற்றுள்ளது.

மேலும் தெரியவருகையில்,

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், மனைவியை விட்டு பிரிந்திருந்த கணவர் ஒருவரே, வீடு புகுந்து மனைவியின் தந்தைக்கும் தாய்க்கும் இவ்வாறு கோடரியால் வெட்டியுள்ளார்.

மருமகனின் தாக்குதலுக்குள்ளான 62 வயதுடைய மாமனார், ஆபத்தான நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், மாமியார் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதேவேளை, குறித்த நபரை கைது செய்ய வாழைச்சேனை பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply