பலாங்கொடை ரத்மளவின்ன பிரதேசத்தில், நேற்று இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
முச்சக்கர வண்டியும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 17 வயதுடைய இளைஞர் படுகாயமடைந்த நிலையில், பலாங்கொடை அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரியவருகின்றது.
இளைஞரனின் சடலம் பிரேத பரிசோதனைக்hகாக, பலாங்கொடை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட வருகின்றனர்.






