திருமலையில் 273 பேருக்கு நியமனம் வழங்கி வைப்பு

திருகோணமலை மாவட்டத்தில், அரசாங்கத்தின் ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ், இன்று 273 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டது.

அரசாங்கத்தின் ஒரு லட்சம் வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ், திருகோணமலை மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக 273 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டது.

இதற்கான நிகழ்வு இன்று (31) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது சேருவில, வெருகல், கந்தளாய் ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கான இளைஞர் யுவதிகளுக்கு, இந்த நியமனம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவான் அத்துகோரல, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபிக், மாவட்ட செயலாளர் சமன் தர்ச பாண்டிகோரல உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply