பாடசாலை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் வாரங்களில் வழமைக்கு!

பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் சில வாரங்களில் வழமைபோல போல மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

மேலும், க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர் தரப் பிரிவுகளுக்கான வகுப்புக்களை விரைவில் தொடங்குவது தொடர்பாக கல்வி அமைச்சருடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும்.

இதுவரை இரண்டு கட்டங்களின் கீழ், நாட்டின் அனைத்து முன்பள்ளி பாடசாலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் மாணவர்களின் வருகையில் முறையான அதிகரிப்பை காண முடிந்துள்ளது.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் வருகையும் சிறந்த மட்டத்தில் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply