புத்தளம் – ஆனமடுவ பகுதியில், நேற்று மின்னல் தாக்குதலுக்கு உள்ளான சிறுவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.
ஆனமடுவ – பாலியாகம பகுதியைச் சேர்ந்த 6 வயதுடைய சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுவன், தனது தாத்தாவுடன் வயலுக்குச் சென்ற போதே, இவ்வாறு மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளான்.
இதனையடுத்து, மின்னல் தாக்குதலுக்கு உள்ளான சிறுவனை அங்கிருந்தவர்கள் உடனடியாக ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த சிறுவனின் சடலம் புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பீ.சி.ஆர். பரிசோதனையின் அறிக்கை கிடைத்த பின்னரே மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் ஆனமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.






