யாழ்ப்பாணத்தில், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வடக்கு ஆளுநர் அலுவலக முன்றிலில் மாபெரும் கண்டனப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட இணைப்பாளர் பிரபாகரன் தெரிவித்தார்
யாழ். மாவட்டத்தில் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் பெரும் இடர்களை எதிர்நோக்கி வருகின்றார்கள்.
அரசால் உர இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதோடு, கால்நடைகளுக்கான தீவனம் பெறுவதில் இடர்பாடு காணப்படுவதனால் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர், பண்ணையாளர்கள் பெரும் இடரை எதிர்நோக்கி வருகின்றார்கள்.
விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நீதி கோரி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் கண்டன போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
அத்துடன், வலி வடக்கு பகுதியில், நல்லாட்சி அரசாங்கத்தின் போது தேசிய வீடமைப்பு அதிகாரசபையால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் முதல் கட்ட நிதி மட்டுமே பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலதிகமான நிதி வசதிகள் இன்றுவரை மக்களுக்கு வழங்கப்படவில்லை.
ஆகவே, பாதிக்கப்பட்ட அனைவரும் ஒன்றிணைந்து கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதோடு, யாழ் மாவட்ட அரச அதிபர் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அலுவலகத்திற்குச் சென்று மகஜரும் கையளிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.






