வவுனியாவில் ஐந்தாம் தர மாணவனுக்கு கொரோனா!

வவுனியா, மகாகச்சக்கொடி பகுதியில் அமைந்துள்ள, பிரபல பாடசாலையில் தரம் 5இல் கல்வி பயிலும் மாணவன் ஒருவனுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த தொடர் முடக்கநிலை நீக்கப்பட்டு, ஆரம்பபிரிவு மாணவர்களுக்கான பாடசாலை கல்வி செயற்பாடுகள் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வவுனியா மகாகச்சக்கொடிய பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் ஐந்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த மாணவனின் வகுப்பறையில் இருந்த ஏனைய மாணவர்களிற்கு நாளை பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply