துப்பாக்கி ரவைகள் உட்பட சட்டவிரோத பொருட்களுடன் இருவர் கைது!

தெல்தெனிய, ரஜவெல்ல பகுதியில் 100 துப்பாக்கி ரவைகள் உட்பட சட்டவிரோத பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெல்தெனிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாவல பகுதியைச் சேர்ந்த 43 மற்றும் 44 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் அமெரிக்க பிரஜை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர்கள் வசமிருந்த, ரம்போ ரக கத்தி, தொலைநோக்கி, எயார் ரைபிள், நான்கு வோக்கிடோக்கிகள், இலக்கத்தகடற்ற இரண்டு மோட்டார் சைக்கிள்கள், இலக்கத்தகடுடன் கூடிய நான்கு மோட்டார் சைக்கிள்கள், வெளிநாட்டுக் கடவுச்சீட்டு மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், தெல்தெனிய நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply